விசாலினி என்னும் விருட்சம்

Dec 11, 2020| Category: typography| Tags: business,peopleஅல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர். 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 13 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும் பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருப்பவர்.

Google நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய இக்குழந்தையைப் பார்த்து,  பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.

11 வயது குழந்தையாக இருக்கும் போதே, 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, Computer Networking தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலகஅரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர். சர்வதேச கணினி மாநாடுகளில் -- பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.ஆனால் விசாலினியோ, 11 வயது குழந்தையாக இருக்கும்போதே, 10 சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில், தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர். இதுவரை டெல்லி, ஹரியானா, சென்னை, மத்திய பிரதேசத்தின் போபால், கர்நாடகவின் பெங்களுர், மங்களூர், குடகுமலை என இந்தியா முழுவதும் 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, Computer Networking குறித்த பல்வேறு நுணுக்கங்கள், சிறப்பம்சங்கள் குறித்து உரை ஆற்றி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் விசாலினி.  She has been invited as the Chief Guest for 10 International Conferences and Delivered Keynote Speeches there.

11 வயதில், உலகின் எந்த ஒரு நாட்டுக் குழந்தையும் செய்யாத சாதனை இது.

ஒரு  ஞாயிற்றுக்கிழமை  மாலையில்   விசாலினியின்   தந்தைக்கு  வந்தது  ஒரு  Phone  Call.
Our Indian Prime Minister Shri Narendra Modi Avl. wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, ‘இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் ’ என்று நெகிழ்ந்து பாராட்டினார். பிரதமருடன் பேசியது என் வாழ்வின் பெருமை மிக்க தருணம் என்கிறார் விசாலினி. திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.

பள்ளிப்படிப்பில் 2 முறை double promotion வாங்கிய விசாலினியின் கவனம், 10 வயதில் Computer Networking துறையில் திரும்பியது.

B.E , B.Tech, M.Tech முடித்த மாணவர்களே திணறும் மிகவும் கடினமான, உலகின் முன்னணி கணினி நிறுவனங்களான Cisco, Microsoft, Oracle, Checkpoint, EXIN, British Council, IDP Australia. International Software Testing Board நடத்தும் சர்வதேச கணினித் தேர்வுகளை தன் 10 வயதில் எழுதத் தொடங்கினார் விசாலினி.

விசாலினியின் கைகளில் இன்று 5 உலக சாதனைகள்

1. The Highest IQ in the World - IQ level 225
2. The Youngest CCNA World Record holder
3. The Youngest IELTS World Record holder
4. The Youngest CCSA World Record holder
5. The Youngest Exin Cloud computing World Record holder

CCNA தேர்வில் 12 வயது Pakisthan மாணவர் Iritza Haider சாதனையை, விசாலினி தன் 10 வயதில் முறியடித்து The Youngest CCNA World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.

IELTS தேர்வில் 12 வயது Pakisthan மாணவி Sitara Bruj Akbar சாதனையை, விசாலினி தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.

CCNA, CCNP, CCIE, MCP, CCSA, EXIN Cloud Computing, ISTQB-ISEB , OCJP, என 13 வயதிற்குள் 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் விசாலினியின் கைகளில்.

விசாலினியின் சாதனைப் பட்டியல் நீண்டதாலோ என்னவோ, தன் 11 வயதில் தனக்குரிய இணையதளத்தைத் தானே வடிவமைத்தார் தன் 11 வயதில். அதுவும் 24 மணிநேரத்தில ( ஒரேநாளில்) www.kvisalini.com

தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.

தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.

TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.

நியூசவுத்வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன்வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப் பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 174 நாடுகளில் 74 மொழிகளில் விசாலினியின் அரைமணிநேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்தியபோது விசாலினிக்கு வயது 13 தான்.

உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.TECH ARENA

Want to learn latest Computer Science related technical topics, Then visit my Tech blog or my youtube channel.

SUSCRIBE MY YOUTUBE CHANNEL