விசாலினிக்கு இஸ்ரோ அழைப்பு...

உலக வரலாற்றில் முதன் முறையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் உரையாற்ற வருமாறு 15 வயது திருநெல்வேலி மாணவி விசாலினிக்கு அழைப்பு.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கல்யாணகுமாரசாமியின் மகள் விசாலினி . இவர் தன் 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும் பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருக்கும் விசாலினி, திருநெல்வேலி தமிழாசிரியர் தமிழ்க்கனலின் பேத்தி ஆவார்.

உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினி, 11 வயது குழந்தையாக இருக்கும் போதே, 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, Computer Networking தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்.

விசாலினியின் திறமையை அறிந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ -- இஸ்ரோவில் உரையாற்ற வருமாறு 15 வயது நெல்லை மாணவி விசாலினிக்கு அழைப்பு விடுத்தது .

இதையடுத்து இஸ்ரோவிற்குச் சென்றார் விசாலினி. அங்கு இஸ்ரோ இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார் விசாலினி.

அங்கு விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன . இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உட்பட விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று standing ovation கொடுத்து விசாலினிக்கு மரியாதை செய்தனர்.

எதிர்காலத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார் என்று இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பாராட்டினார்.

மேலும் செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளையும் விசாலினிக்கு பரிசளித்தார் .

இந்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக்கோள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றில் முதன் முறையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் 15 வயது மாணவி ஒருவர், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியது இதுவே முதன் முறையாகும். அந்தப் பெருமை திருநெல்வேலி மாணவி விசாலினியையே சேரும்.

விசாலினியின் சாதனைப் பயணம் தொடர்கிறது .

மேலும் விபரங்களுக்கு: Click Here